மாவட்ட செய்திகள்
உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் தோண்டப்பட்டு மூடப்படாத சாக்கடை கால்வாய் பொதுமக்கள் அவதி.
உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் இந்து சமய அறநிலைத்துறை அறநிலையத்துறைக்கு உட்பட்டஆஞ்சநேயர் கோவில் உள்ளது இப்பகுதியில் வணிக வளாகங்கள் செல்வதற்கும் அரசு மருத்துவமனை மற்றும் வங்கிகள் செல்வதற்கான ரோடு உள்ளது இதில் சாக்கடை கால்வாய் தோண்டப்பட்ட கால்வாய் பணி நிறைவடையாமல் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக எந்த வேலையும் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது மேலும் கால்வாயின் வழியே வெளியேறும் சாக்கடை நீரீன் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர் மேலும் தோண்டப்பட்ட மண் மற்றும் கற்கள் ரோட்டிலேயே குவிக்கப்பட்டுள்ளது இதனால் வாகன ஓட்டிகளும் ஒரு பகுதியிலிருந்து மறுபுறம் செல்ல சிரமப்படுகின்றனர் மேலும் திறந்த வெளி சாக்கடையால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது மேலும் கோயிலுக்கு செல்வோர் இந்த பாதையை பயன்படுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது எனவே இந்த சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.