தலைப்பு செய்திகள்
திமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் அதிரடியாக நீக்கம் – திமுக பொதுச்செயலாளர்.
கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் உள்ளிட்ட 5 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்டதாக திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சூரியபிரகாஷ் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று தேனி நகர பொறுப்பாளர் டி.பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் எஸ்.பி.முரளி, போடி நகரச் செயலாளர் மா.வீ.செல்வராஜ் நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியம், தேவர் சோலை பேரூர் செயலாளர் பி.மாதேவ் ஆகியோரையும் தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.