மாவட்ட செய்திகள்
தஞ்சை அய்யம்பேட்டையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால் ஸ்வாமி ஆலய பங்குனி உத்திரம் திருவிழா.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால் ஸ்வாமி ஆலய பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைப்பெற்றது. ஏராளமான தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால ஸ்வாமி கோவில் எழுந்தருளி உள்ளது. இக்கோவிலின் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைப்பெற்றது. தொம்பை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 40 அடி உயரம் உள்ள திருத்தேரில் உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கீழ வீதி தேர்நிலையில் இருந்து பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் புறப்பட்டது. நான்கு ராஜவீதிகளிலும் வலம் வந்த திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து பெருமாளை தரிசனம் செய்தனர். ஒவ்வொரு நிலையிலும் பக்தர்கள் பூஜை செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.