BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சிறப்பான பட்ஜெட்: சிவசேனா பாராட்டு.

சிறப்பான பட்ஜெட்: சிவசேனா பாராட்டு

“தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை அனைத்து மக்கள் நலன் காக்கும், தமிழ் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் சிறப்பான பட்ஜெட்” என்று சிவசேனா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சியின் மாநில தலைவர் ரவிச்சந்திரன், மாநில முதன்மைச் செயலாளர் சுந்தர வடிவேலன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கை மிக சிறப்பானதாக, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கக்கூடிய வகையில் இருக்கிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவது என்பது சிறப்பான திட்டமாகும். தமிழக அரசு, அரசு பள்ளிகளில் பயின்று, அரசு கல்லூரிகளில் பயிலக் கூடிய மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று சிவசேனா கட்சி கோரிக்கை வைக்கிறது.

காவல்துறைக்கும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறுகளை தடுப்பதற்காக தொகை ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது. அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் தடுப்பதற்கும் நிதி ஒதுக்கி இருப்பது சிறப்பான பாராட்டுக்குரிய அம்சமாகும். காவிரி டெல்டா பாசன வசதிகளை மேம்படுத்த நிதி வைத்திருப்பதும் மிகுந்த பாராட்டிற்குரியது. ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமிழக மக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் விதத்தில் பட்ஜெட் அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்பான பட்ஜெட்டை வழங்கிய தமிழக முதல்வருக்கும், தமிழக நிதியமைச்சருக்கும் சிவசேனா கட்சி மனதார பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது” என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )