மாவட்ட செய்திகள்
அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை.. சபாநாயகர் கடும் எச்சரிக்கை.
“அரசு அதிகாரிகள் சரியான முறையில் பணியாற்றுவதில்லை. இத்தகைய அதிகாரிகள் மீது முதல்வர் உதவியுடன் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” என்று சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, புதுச்சேரி சபாநாயகர் செல்வம் அளித்த பேட்டி: “புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி தீர்வு காணப்படும். மத்திய நிதியமைச்சரிடம் புதுச்சேரி வளர்ச்சித் திட்டங்களுக்கு போதுமான நிதியை வழங்குமாறு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த ஒதுக்கீடு செய்த 120 கோடி ரூபாயை விரைவில் வழங்க வலியுறுத்தி உள்ளோம். கடந்த ஆட்சியில் செயல்படாமல் இருந்த அதிகாரிகள் தற்போதைய அரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை 2021 – 2022-ம் நிதியாண்டில் ஜல்சக்தி திட்டத்திற்கு மத்திய அரசு 33 கோடி ரூபாய் வழங்கியது. இதில், 7.50 கோடி ரூபாயை மட்டுமே அரசு அதிகாரிகள் செலவு செய்தனர். மீதி பணத்தை செலவிடாமல் வீணடிக்கின்றனர்.
அரசு அதிகாரிகள் சரியான முறையில் பணியாற்றுவதில்லை. இத்தகைய அதிகாரிகள் மீது முதல்வர் உதவியுடன் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.