தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை. ஏன் தெரியுமா?
அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோரிடையே பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வரும் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்.
பள்ளியில் பெற்றோரின் பங்கு மற்றும் அடுத்து நடைபெற உள்ள மேலாண்மைக்குழு (உறுப்பினர்கள் தேர்வு ) மறு கட்டமைப்பு நிகழ்வில் பெற்றோர் கலந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கமாக எளிய முறையில் தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். இதற்காக, தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு வர வேண்டும்.
மேலும், பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த கூட்டம் மட்டுமே அன்று நடைபெற வேண்டும். அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை.
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிக்கு வரவேண்டிய சூழல் உள்ளதால் நாளை (19-ம் தேதி) சனிக்கிழமையன்று தொடக்க நிலை முதல் மேல்நிலை வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.