தலைப்பு செய்திகள்
தமிழக பட்ஜெட்: ஒருநாள் கழித்து கருத்து சொன்ன கமல்.
” தமிழக அரசு தாக்கல் செய்த 2022-23-ம் ஆண்டு பட்ஜெட் ஆறுதலும், ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து ஒருநாள் கழித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ” தமிழக அரசு தாக்கல் செய்த 2022-23 பட்ஜெட் ஆறுதலும், ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ” அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறப் பண உதவி, பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்க்க நிதி, மாநிலம் முழுதும் நூல்களுக்கான திட்டம் போன்றவை நம்பிக்கை தருகின்றன. அத்துடன் அழுத்தம், திருத்தமாக அளிக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றைப் பற்றிய பேச்சே இல்லை என்றும்” அவர் கூறியுள்ளார்.