மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறையில் நடைபெற்ற சாரணர்கள் முகாமில், இரண்டாம் நாளான இன்று பிரார்த்தனை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் நடைபெற்ற சாரணர்கள் முகாமில், இரண்டாம் நாளான இன்று பிரார்த்தனை நடைபெற்றது கொடி சமிக்ஞைகள், காடுகளில் கூடாரம் அமைத்து தங்குவது, உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், சாரண சாரணியர்கள் மாவட்ட முகாமில் முகாம் நேற்று துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் முகாமில் மயிலாடுதுறை, மாவட்டத்தை சார்ந்த 60பள்ளிகளில் இருந்து 400 சாரண, சாரணியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுக்கு சுனாமி, பூகம்பம், விபத்து உள்ளிட்ட காலங்களில் விரைந்து செயல்பட்டு, பொதுமக்களை காப்பாற்றுவது, முதலுதவி, சாலை பாதுகாப்பு, அவசரகால நடவடிக்கைகள், தேசபக்தி பாடல்கள் போன்றவை கற்பிக்கப்பட்டது. பயிற்சி வல்லுனர்கள் பங்கேற்று மேப்பிங் பயிற்சி, காடுகளில் கூடாரம் அமைத்து தங்குவது, கிடைக்;கும் பொருட்களைக்கொண்டு முதலுதவி செய்வது, திசைக்காட்டும் கருவிகளை கையாள்வது, கொடிகளைக்கொண்டு தகவல்களை பரிமாறுவது, சமிக்ஞை செய்வது, நட்சத்திரங்களைக்கொண்டு இரவில் திசையறிவது,

பொருட்களின் எடையறிதல் உள்ளிட்ட நுணுக்கமான பயிற்சிகள் அளித்தனர். அடிப்படை, சிறப்பு, மேல்நிலை என்ற மூன்று வகையில் இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் திறனுள்ள மாணவர்களை உருவாக்க முடியும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும் சமய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு சமய பிரார்த்தனை பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் பரதநாட்டியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
