மாவட்ட செய்திகள்
காரைக்கால் திருப்பட்டினம் கடைவீதியில் வீழி வரதராஜபெருமாள் கோயில் திருக்கல்யாண நிகழ்ச்சி.

காரைக்கால் மாவட்டம் அடுத்த திருப்பட்டினம் கடைவீதியில் வீழி வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சி முடிவடைந்ததும், அலங்கரிக்கப்பட்ட வரதராஜபெருமாள் மற்றும் செங்கமலத்தாயார் கோயில் பிரகாரத்தில் மேள, தாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நடனமாடியபடியே பட்டாச்சாரியார்கள் மாலை மாற்றும் நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
