BREAKING NEWS

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இளஞ்சுழற் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் இன்று கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மதுரை, செந்தமிழ் கல்லூரி, துணைமுதல்வர், மற்றும் பட்டிமன்ற பேச்சாளார்,முனைவர் ரேவதி சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பெண்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும், அவர்கள் இன்றி உலகம் இயங்காது என்றும், பெண்கள் அனைவரும் அனைத்து துறைகளிலும் முன்னேற ஆர்வமுடனும் முழு ஈடுபாட்டுடனும் செயலாற்ற வேண்டும் என்று உரையாற்றினார். மேலும் கல்லூரி மாணவிகளுக்கு பரதநாட்டியம், நடனம், பாட்டு, போன்ற போட்டிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.. இவ்விழாவில் சுமார் 350க்கும் மேற்ப்பட்ட கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் மற்றும் சமூக அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

கல்லூரி இயக்குநர் முனைவர்; சண்முகவேல், முதல்வர் முனைவர் காளிதாச முருகவேல் தலைமையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி துணைப் பேராசிரியர்கள் சுப்ரமணியன், செந்தில்குமார், மற்றும் மாணவிகள் ஆர்வமுடன் செய்திருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

CATEGORIES
NEWER POST
OLDER POST

COMMENTS

Wordpress (0)
Disqus ( )