மாவட்ட செய்திகள்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இரும்புக் கம்பி ஏற்றிச் சென்ற மினி டெம்போ ஓட்டுநரின் கவனக்குறைவால் இருசக்கர வாகனத்தில் சென்ற கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கூலி தொழிலாளி மூன்று பேர் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி. மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தேவூர் போலீசார் தீவிர விசாரணை.
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த எடப்பாடியில் இருந்து குமாரபாளையம் செல்லும் பிரதான சாலையில், பாரதிநகர் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூன்று பேர், எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த இரும்புக் கம்பி ஏற்றிச் சென்ற மினி டெம்போ மீது மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அதேப் பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து என்பவர் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த செங்கோட்டையன் என்பவருக்கு கைமுறிவு ஏற்பட்டு, எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேவூர் காவல்த்துறையினர் சம்பவ இடத்தில் உயிரிழந்த இளங்கோவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இரும்புக் கம்பி ஏற்றிச் சென்ற மினி டெம்போ ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்ப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.