சினிமா
சாலையில் கார் கவிழ்ந்து விபத்து: நடிகை உயிரிழப்பு.
ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு திரும்பிய போது ஏற்பட்ட கார் விபத்தில் பிரபல தெலுங்கு நடிகை உயிரிழந்தார்.
பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி என்ற டோலி டி குரூஸ் (26). சில படங்களிலும் ’மேடம் சர் மேடம் அந்தே’என்ற வெப் தொடரிலும் நடித்துள்ள இவர், யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்தார். இதன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடையே புகழ்பெற்றிருந்தார்.
இவர், தனது நண்பர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரை அவர் நண்பர் ரத்தோட் ஓட்டி வந்தார். ஐதராபாத் கச்சிபவுலியில் மருத்துவமனை ஒன்றின் அருகில் கார் வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே காயத்ரி உயிரிழந்தார். ரத்தோட் படுகாயமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ரத்தோட்டும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சாலையில் கவிழ்ந்த காருக்கு அடியில் 38 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண்ணின் உடல் கிடந்தது. அவர் சாலையில் நடந்து சென்றவராக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
நடிகை காய்த்ரியின் மரணம் தெலுங்கு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.