மாவட்ட செய்திகள்
பொள்ளாச்சி கோட்ட அஞ்சல் அலுவலகமும் மற்றும் உடுமலை பூர்வீக பள்ளிவாசல் நிர்வாகமும் இணைந்து நடத்திய ஆதார் முகாம்.
பொள்ளாச்சி கோட்ட அஞ்சல் அலுவலகமும் மற்றும் உடுமலை பூர்வீக பள்ளிவாசல் நிர்வாகமும் இணைந்து நடத்திய ஆதார் முகாம் இன்று 21.03.2022 திங்கட்கிழமை பூர்வீக பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
முகாமை திரு S.ஜஹாங்கீர் பொள்ளாச்சி அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமை தாங்கவும் மௌலவி S.M.சையத் ஈஸா பைஜி ஹஜ்ரத் அவர்களும் நகர தி.மு.கழக அவை தலைவர் M.A.K.ஆசாத்MC, திருப்புர் தெற்கு மாவட்ட த.மு.மு.க தலைவர் A.அப்துல் கய்யூம் (எ) செல்லப்பாMC மற்றும் 12,14,16,18,20 ஆகிய வார்டுகளின் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பூர்வீக பள்ளிவாசல் தலைவர் ஹாஜி.A.ஷேக் தாவூத், H.உமர் பாரூக் பொருளாளர், E.முகமது அலி துணை தலைவர், M.இக்பால் துணை செயலாளர், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் S.சர்புதீன், M.சாந்து முகமது, S.பீர் முகம்மது, S.முகமது இஸ்மாயில், D.அப்துல் ரகுமான், S.உமர் பாரூக், M.அப்பாஸ், N.யூசுப், A.அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகிக்கவும் உடுமலை நகர மன்ற தலைவர் உயர்திரு மு.மத்தின்BBA அவர்கள் முகாமை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியை உடுமலை பூர்வீக பள்ளிவாசல் செயலாளர் அல்ஹாஜ் M.தாஹிர் பாஷா அவர்கள் ஒருங்கிணைப்பு செய்தார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.