BREAKING NEWS

BDO அலுவலரை கொலை மிரட்டல் விடுக்கும் பாமக ஒன்றிய குழு துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்..

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் 47 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு மொத்தம் 19 ஒன்றியகுழு உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவை சேர்ந்த வடிவேலு ஒன்றிய குழு தலைவராக பதவி வகிக்கிறார். துணைத்தலைவராக பாமகவை சேர்ந்த தீனதயாளன் உள்ளார். மேலும் அதிமுக ,பாமக, சுயேச்சை கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர்.

மேல்புலம் பகுதியில் முறைகேடாக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுவதற்க்கு 58 லட்சம் ரூபாயில் டெண்டர் வைக்க வட்டார வளர்ச்சி அலுவலரை ஒன்றிய குழு தலைவர் துணைத் தலைவர் அழுத்தம் தந்து வந்ததாக தெரிகிறது.

ஆனாலும் தொடர்ந்து BDO டெண்டர் வைக்காமல் இருந்து வந்த நிலையில் ஆத்திரமடைந்த நெமிலி ஒன்றிய குழு துணை தலைவர் தீனதயாளன் கடந்த 8 தேதி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு உள்ளே செல்லும் வழியில் அதிகாரிகளை உள்ளே வைத்து பூட்டி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதனால் அங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இந்த சம்பவம் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் துணைத் தலைவர் தீனதயாளன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அனைத்து ஊழியர்கள் அரை நாள் விடுப்பு எடுத்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Share this…

CATEGORIES
TAGS