BREAKING NEWS

CAA சட்டத்தால் இந்திய அல்லது தமிழக இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படுகிறதா என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு.

CAA விவகாரத்தில் புதியதாக கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகிறார் அவரை கிறிஸ்தவ அமைப்புகள் பின்னிருந்து இயக்குகிறது.

போதை பொருள் விவகாரத்தில் திமுக அரசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் ஆளுநர் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூரில் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் பேட்டி. பிரதமர் மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறக்கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும் சென்று அங்குள்ள கோவில்களில் செங்கோலை முன்னிறுத்தி சிறப்பு வழிபாடு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஷ்வரர் ஆலயத்தின் வழிபாடு நடத்தியவர் பின்னர் செய்தியாளர்களை சந்திக்கையில்,

நேற்று மத்திய அரசு கொண்டு வந்த CAA சட்டத்தை நான் வரவேற்க்கிறேன்.
CAA வால் எந்த இசுலாமியருக்கு பாதிப்பு உள்ளது?

புதியதாக கட்சி துவங்கியுள்ள ஜோசம் விஜய் அரசியல் அடிப்படை அறிவு கூட இல்லாமல் CAA பற்றி கருத்து கூறுகிறார். அவருக்கு யார் எழுதி கொடுக்கிறார்கள். கிருஸ்தவ மாப்பியாக்கல் தான் விஜய் கட்சியை வழிநடத்துகிறார்கள். விஜயின் அறிக்கையை நான் கண்டிக்கிறேன் என்றார்.

மேலும் இலங்கைத் தமிழர்கள் நமது தொப்புல்கொடி உறவுகள். அவர்களுக்கு இங்கேயே குடியுரிமை கொடுப்பதால் பாதிக்கப்படுவார்கள். வேண்டுமானால் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுப்பது அவசியம் அதை பாஜகவிடம் நாங்கள் வலியுறுத்துவோம்.

தமிழகத்தில் பாஜக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வருகிறேன்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போதை மாபியா, லாட்டரி மாபியா மற்றும் சாராய மாபியா போன்றவர்களின் பணத்தில் திமுக தான் தேர்தலில் சந்திக்க போகிறது. திமுக இப்போதே பணத்தை பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழகத்தில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் திமுக ஆட்சியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இதற்க்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிட மாடலை நாம் முறியடிக்க வேண்டும்.

மோடிக்கு ஆதரவாக தமிழகத்தில் எங்கள் இரண்டு லட்சம் தொண்டர்கள் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்கள்.

ஒரு கோடி பரிசு அறிவிக்கிறேன். CAA வால் இந்திய அல்லது தமிழக இசுலாமியர்களின் குடியுரிமை பாதிக்கிறதா? என யாராவது நிருபித்தால் ஒரு கோடி பரிசு கொடுக்கிறேன் என கூறினார்.

கடந்த முறை பணம் விளையாடியதால் 2019 நாடாளுமன்ற தேர்தல் வேலூரில் நிறுத்தப்பட்டது. மணல் கொள்ளையில் கிடைத்த பணத்தை வைத்து தான் திமுக கதிர் ஆனந்த் தேர்தலை சந்திக்கிறார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜின் சம்பத் கூறினார்.

CATEGORIES
TAGS