அந்தியூர் அருகே சேற்றில் சிக்கி பெண் யானை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட குரும்பனூர் காடு பகுதியில் சென்னம்பட்டி வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அப்பொழுது அப்பகுதியில் பெண் யானை ஒன்று சேற்றில் சிக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக இதுகுறித்து வனச்சரகர் செங்கோட்டையன் மற்றும் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திலேயே யானையை எண்ண மங்கலம் கால்நடை மருத்துவர் அருள் முருகன் பிரேத பரிசோதனை செய்தார் பிரேத பரிசோதனையில் யானை சேற்றில் சிக்கி அதிர்ச்சியில் மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது பின்னர் யானையை வனத்துறையினர் அப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
CATEGORIES Uncategorized
TAGS தமிழ்நாடு
