அரசியல்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கந்தநேரி பகுதியில் அமைந்துள்ள அதிமுக புறநகர் அலுவலகத்தில் அதிமுக கட்சியின் கழக அமைப்புத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.
வேலூர் புறநகர் மாவட்டம் அணைக்கட்டு ஒடுகத்தூர் பள்ளிகொண்டா பெண்ணாத்தூர் கணியம்பாடி ஒன்றியத்துக்கான ஒன்றிய செயலாளர் அவைத்தலைவர் இணைச் செயலாளர் மாவட்ட பிரதிநிதி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது இதற்கான மனுக்கல் முன்னாள் அமைச்சர் சின்னையா சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், திருக்கழுக்குன்றம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியாரிடம் மனுக்கல் அளித்தனர்.
அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கழக அமைப்பு தேர்தலுக்கான மனுக்கல் வழங்கிச் சென்றனர். போட்டிகள் பெரும்பாலும் இல்லாததால் தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகிறது. வேட்புமனுக்கள் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பெறப்பட்ட வருகிறது மேலும் எந்த ஒரு பகுதிகளுக்கும் போட்டிகள் இல்லாததால் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.