BREAKING NEWS

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பொம்மியம்மாள்.வெள்ளையம்மாள் சுவாமி கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பொம்மியம்மாள்.வெள்ளையம்மாள் சுவாமி கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குவாகம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பொம்மியம்மாள்.வெள்ளையம்மாள் மதுரைவீரன் சுவாமி, கருப்பண்ண சுவாமி, பாப்பாத்தி யப்பான் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.

இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற நான்கு கால வேள்வி பூஜைகள் முடிவற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு கோவிலைச் சுற்றி வலம் வந்தது. இதனையடுத்து அருள்மிகு பொம்மியம்மாள்.வெள்ளையம்மாள் மதுரைவீரன் சுவாமி, கருப்பண்ண சுவாமி, பாப்பாத்தி யப்பான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் ஸ்ரீ ஆகிய கோவில் கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர்.

பின்னர்க அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புனித நீரானது பக்தர்கள் மேல் நெல் பூக்கள் நவதானியங்களும் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விழா சார்பில் அன்னதான வழங்கப்பட்டது .

CATEGORIES
TAGS