அருள் மிகு முத்து மாரியம்மன் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு….
ஈரோடு திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கன்னிமா கருப்பண்ண சுவாமி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தனம் மற்றும் வர்ண வேலை திருப்பணிகள் செய்து திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா காலை மகா கும்பாபிஷேகம் இன்று குருக்கள் விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மேள தாளங்கள் முழங்க யாக சாலையில் வைத்து பூஜை செய்த புனித நீரை குருக்கள் தலையில் சுமந்து வந்து முத்து மாரியம்ன் கோவில் கலசத்திற்கு குருக்கள் வேத மந்திரம் முழங்க புனித நீரை ஊற்றினர். இதே போல சித்தி விநாயகர், கன்னிமார் கருப்பன்னசுவாமிகளுக்கு பனித நீர் ஊற்றப்பட்டது.
இதனையெடுத்து புனித நீரை அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் மீது புனித நீர் குழாய் மூலம் தெளிக்கப்பட்டது.