அரையபுரம் ஸ்ரீ வீரமகா சக்தி பத்ரகாளியம்மன் கோவில் சக்தி கரகம், பால்குடம் திருவிழா பக்தர்கள் ஏராளமானோர் பால் குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அரையபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீரமகா சக்தி பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த புதன்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
சனிக்கிழமை வங்காரம்பேட்டை நவநீதப்பெருமாள் கோயிலில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி மற்றும் சீர்வரிசை தட்டு தாம்பூலம் எடுத்து கோயில் வந்தனர்.
நேற்று காலை 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் பக்தர்கள் சக்தி கரகம், அக்னி சட்டி, பால்குடம், செடில் காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து மதியம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
TAGS ஆன்மிகம்தஞ்சாவூர்தஞ்சாவூர் districtதஞ்சாவூர் மாவட்டம்தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்பாபநாசம் தாலுக்காமாவட்டச் செய்திகள்