BREAKING NEWS

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் நீர்வீழ்ச்சியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது.

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் நீர்வீழ்ச்சியில் விடிய விடிய கொட்டி தீர்த்த  கனமழையால்  தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது.

ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியின் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது இந்தப் பகுதியை வனத்துறையினர் சுற்றுலாத்தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் வசதி வனப்பகுதியில் பொழுதுபோக்கு வகையில் குடில் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டன.

மேலும் பூங்காவில் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் தார் சாலை மற்றும் ஜல்லிக்கட்டு காளை மான் யானை உள்ளிட்ட சிலைகள் கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதால் ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர் சேலம் விழுப்புரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்து விடுமுறை நாட்களில் தனது குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைந்து வறண்டு காணப்பட்டு வந்தது . மேலும் நீர் வரத்து இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லேசான மற்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் முட்டல் நீர்வீழ்ச்சியில் தற்போது நீர்வரத்து வரத் தொடங்கியது இதனால் முட்டல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால் நீர்வீழ்ச்சி குதியில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS