BREAKING NEWS

ஆத்தூர்_ சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை.

ஆத்தூர்_ சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் பழைய பள்ளிவாசல் மைதானத்தில் அமைந்துள்ள திடலில் ஹஜ்ரத் ஹபீப் ரஹ்மான் தலைமையில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் உலக மக்கள் அமைதிக்காகவும் சகோதரத்துவத்துக்காகவும்  கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று.

ஒருவருக்கொருவர் கட்டி தழுவி சகோதரத்துவத்தை பகிர்ந்து கொண்டனர். மேலும் இதைப் பற்றி இஸ்லாமிய பெருமக்கள் சிலரிடம் கேட்கும் போது அவர்கள் கூறியதாவது… பக்ரீத் திருநாள் என்பது இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான தியாகத் திருநாள் என்னும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

இந்த தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர், அதன் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர் என அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இந்த சிறப்பு தொழுகையில் (1000) ஆயிரத்திற்கும்க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டு எல்லாம் வல்ல இறைவனை வேண்டினர்…

CATEGORIES
TAGS