ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் புகாரில் கைது.

திருவள்ளூர் மாவட்டம் தமிழக எல்லையில் உள்ள திருத்தணி இந்த பகுதி பேருந்து நிலையத்திலிருந்தும் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பட்டுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, போன்றபகுதிகளிலிருந்து திருத்தணி வழியாக ஆந்திர மாநிலத்திற்கு திருப்பதி கோயிலுக்கு செல்ல வேண்டிய தமிழக பேருந்துகள் 40 பேருந்துகள், இன்று நிறுத்தப்பட்டுள்ளன.
இதுபோல் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் திருத்தணிக்கு காஞ்சிபுரம் மற்றும் பாண்டிச்சேரிக்கு செல்ல வேண்டிய வரும் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் 30 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன,இதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்துதிருத்தணி வழியாக திருப்பதிக்கு செல்ல வேண்டிய தமிழக பேருந்துகள் 40 பேருந்துகள் சேவையும் இன்று நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்..
ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் புகாரில் சிஐடி போலீசார் கைது செய்துள்ள காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகப் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள்
அதிகாலை முதல் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு செல்வதற்கும் மற்றும் ஆந்திர மாநிலம் பல்வேறு பகுதிகளான நகரி, புத்தூர், காளாஸ்திரி திருக்கோவிலுக்கு, போன்ற பகுதிகளுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
தனியார் பேருந்துகள் மட்டும் சொற்ப அளவில் செல்கின்றன,இதனால் கூட்டம் நெரிசல் ஏற்பட்டுள்ளது,இதே போல் பல பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு கோயிலுக்குமற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு பொதுமக்கள் திருத்தணி ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர்,திருத்தணி ரயில் நிலையத்தில் அதிக அளவு பயணிகள் இருப்பதால் அதிகப்படியான ரயில்களும் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் ஆந்திர மாநிலத்தில் தற்போது சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் எப்போது வேண்டுமானாலும் செல்லும் பேருந்துகளும் – ரயில்களும் நிற்கவைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று ரயில்வே துறை அதிகாரிகளும் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்,
ஆந்திராவில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்….