BREAKING NEWS

ஆன்மிகம்

அட்சய திருதியை தினமான இன்று 27
நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்:

1. அஸ்வினி கதம்ப சாதம் தானம் ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.

2 பரணி -நெய்தானம் தானம், ஏழை
நோயாளிகளுக்கு உதவலாம்.

3. கிருத்திகை- சர்க்கரை பொங்கல் தானம்.
பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.

4) ரோகிணி-பால் அல்லது பால் பாயாசம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

5. மிருக சீரிஷம்-சாம்பார் சாதம் தானம் உடல்
ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.

6. திருவாதிரை-தயிர் சாதம் தானம். ஏழை
மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.

7. புனர்பூசம் தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.

8. பூசம்-மிளகு கலந்த சாதம் தானம்.
கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு
கொடுக்கலாம்.

9.ஆயில்யம் – வெண் பொங்கல் தானம். பச்சை
பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.

10. மகம்- கதம்ப சாதம் தானம், கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.

11. பூரம் – நெய் சாதம் தானம். மனநோயாளிகளுக்குஉதவலாம்.

12. உத்திரம்- சர்க்கரை பொங்கல் தானம்.
கால்நடைகளுக்கு கோதுமை கொடுக்கலாம்.

13. அஸ்தம்- பால் பாயாசம் தானம். மனநலம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.

14. சித்திரை துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம்
தானம் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.

15. சுவாதி உளுந்து வடை தானம், வயதானவர்களுக்கு உணவு, உடை
வாங்கிக்கொடுக்கலாம்.

16. விசாகம்- தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு
கடலை தானியம் கொடுக்கலாம்.

17. அனுசம்- மிளகு கலந்த சாதம் தானம் வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.

18. கேட்டை வெண் பொங்கல் தானம், பசு மாட்டுக்கு
பச்சைப் பயிறு கொடுக்கலாம்.

19. மூலம் கதம்ப சாதம் தானம். ஏழைகளுக்கு
உதவலாம்.

20. பூராடம்- நெய் சாதம் தானம் ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.

21. உத்திராடம்- சர்க்கரை பொங்கல் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

22. திருவோணம்- சர்க்கரை கலந்த பால் தானம். வறுமையில் இருப்பவர்களுக்கு நெல் தாளம்
செய்யலாம்.
23.அவிட்டம்- சாம்பார் சாதம் தானம். கால்நடைகளுக்கு துவரை வாங்கி கொடுக்கலாம்.

24. சதயம்- உளுந்து பொடி சாதம்
தானம்,
கால்நடைகளுக்கு உளுந்து தீவனம்
கொடுக்கலாம்.

25. பூரட்டாதி-
தயிர் சாதம் தானம்.

26. உத்திரட்டாதி’ மிளகு சாதம் தானம், ஏழைகளுக்கு
உணவு, உடை தானம் சிறந்தது.

27. ரேவதி- வெண் பொங்கல் பிரசாதம் நல்லது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )