ஆன்மிகம்
கோவில்பட்டியில் டவுன் ஜாமிய பள்ளிவாசல் சார்பில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு:


ஈகை திருநாள் என்று அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு தமிழகத்திலும் பல்வேறு இடங்களிலும் மசூதிகளில் இஸ்லாமிய பெருமக்கள் சிறப்பு தொழுகைகள் மேற்கொண்டனர்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள டவுன் ஜாமியா பள்ளிவாசல் சார்பில் சாலை புதூரில் உள்ள திடலில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள், சிறுவர்,சிறுமியர்களும் கலந்து கொண்டனர். டவுண் பள்ளி வாசல் முகம்மது அலி தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார்.

இஸ்லாமிய மக்களுக்கு நல்லிணக்கத்தை வலியுறுத்தி இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
