BREAKING NEWS

ஆஸ்கர் விருதுபெற்ற இசை அமைப்பாளர் வாங்கலிஸ் காலமானதை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருதுபெற்ற இசை அமைப்பாளர் வாங்கலிஸ் காலமானதை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.


எலெக்ட்ரானிக் இசை குரு காலமானார்: ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்!

பிரபல கிரேக்க இசை அமைப்பாளர் வாங்கலிஸ் பபதானஸியோ (Vangelis Papathanassiou). இவர் சேரியாட்ஸ் ஆஃப் ஃபயர், பிளேட் ரன்னர், மிஸ்சிங், அண்டார்டிகா, தி பவுண்டி, அலெக்ஸாண்டர் உட்பட பல ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதில் சேரியாட்ஸ் ஆஃப் ஃபயர் படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்றவர் இவர்.

இந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான்  பரபரப்பு தகவல்! | A gang is working against me in Bollywood says A R Rahman  - Tamil Oneindia

எலெக்ட்ரானிக் இசையில் புதுமைகள் படைத்தவர் என்று கூறப்படும் இவர், உடல் நலக்குறைவால் பிரான்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79.

அவர் மறைவுக்கு இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கிரேக்க நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்ஸ்டோகிஸ் வெளியிட்டுள்ள இரங்கலில், இசையுலகம் சர்வதேசக் கலைஞரை இழந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )