இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகானுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் இன மறுமலர்ச்சி கழகதினர்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகானுக்கு தமிழ் இன மறுமலர்ச்சி கழகத்தினர் இன்று அவரை வேலூரில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்
இனையடுத்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாளிகையாளர் யாவோர்க்கும் நடிகர் மன்சூரலிகானின் பணிவான வணக்கங்கள். உண்மைத் தமிழர்கள் இந்திய அரசியலில் பெரும் பங்கு வகிக்க ஆரம்பிக்கப்பட்டிருப்பது தான் இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் வேலூர் தொகுதியில் எனது வெற்றிக்காக தமது, இயக்க உடல் பொருள் ஆவி அனைத்தையும் முழுக்க ஈடுபடுத்தி தமிழ் இன மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் லியாகத்தலி, போராளி மற்றும் பொதுச் செயலாளர் சந்தோஸ் குமார் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவிக்க கடமை பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.