இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன்

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான
தொல்.திருமாவளவன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் ஆகியோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, நக்கம்பாடி,சொக்கநாதபுரம்,நமங்குணம், பழமலைநாதபுரம், நல்லநாயகபுரம்,வஞ்சினபுரம்,குழுமூர்,சித்துடையார், மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, படைவெட்டிக்குடிக்காடு, அயன்தத்தனூர், வங்காரம், அங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய விசிக தலைவர் தொல் திருமாவளவன், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஏராளமான கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.