BREAKING NEWS

இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த திருவிளக்கு பூஜை

இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மாங்கல்ய பலம் வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் பூஜை செய்து வழிபாடு:-

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த புனுகீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அடர்ந்த வனமாக இருந்த பகுதியில் புனுகு பூனை உயர்ந்த வாசனை திரவியமான புனுகினை சாத்தி சிவலிங்கத்திற்கு வழிபாடு நடைபெற்றது என்றும் தஞ்சையை ஆண்ட சோழ மன்னன் இதனை அறிந்து காட்டை சீர்திருத்தி கோயிலை அமைத்தான் என்றும் வரலாறு தெரிவிக்கின்றது. பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அம்மன் சர்வ் அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கே சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு பெண்கள் குத்து விளக்கை அம்மனாக பாவித்து 108 முறை போற்றி மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து தூப தீபங்கள் காட்டி நைவேத்தியமளித்து திருவிளக்கு பூஜை செய்தனர். மாங்கல்ய பலம் வேண்டிய நடைபெற்ற இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

CATEGORIES
TAGS