ஈரோட்டில் அரசு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா
தமிழ்நாடு முதலமைச்சர், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான அரசு விழாவில், ஈரோடு மாவட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனைக் கட்டடத்தினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா, மருத்துவமனை கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். உடன் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி மேயர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்,ஈரோடு மாநகராட்சி துணைமேயர், ஈரோடு மாநகராட்சி இரண்டாம் மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர்கள், அரசு மருத்துவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஈரோடு
TAGS ஈரோடு மாவட்டம்
