BREAKING NEWS

உணவிற்காக கூட்ட நெரிசல்! கிறிஸ்தவ தேவாலயத்தில் 31 பேர் பலி!

உணவிற்காக கூட்ட நெரிசல்! கிறிஸ்தவ தேவாலயத்தில் 31 பேர் பலி!

நைஜீரியாவில், கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் கூடியிருந்தவர்கள், உணவிற்காக ஒரே இடத்தில் கூடிய போது, கூட்ட நெரிசலில் சிக்கி 31பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் மக்கள் நெரிசல் ஏற்படுவதும் அந்த கூட்ட நெரிசலில் சிலர் சிக்கி மாட்டிக் கொள்வதும் அதனால் சிலர் காயப்படுவதும் இயல்பு. ஆனால் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில்  உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில்  ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தென்கிழக்கே போர்டு ஹர்கோர்ட் நகரில் கிங்ஸ் அசெம்பிளி கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர்.

நைஜீரியா

இந்நிலையில் தேவாலயத்தில் உணவு வழங்குவதாக அறிவித்த நிலையில் சிறிய வாசல் வழியாக அனைவரும் முண்டியடித்து கொண்டு செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பலரும் அதில் சிக்கிக் கொண்டனர்.

கதவு மூடப்பட்டு இருந்த போதிலும் பலரும் கட்டுக்கடங்காமல் புகுந்தது மேலும் சிக்கலை உண்டாகியுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த நிலையில்  7 பேர் படுகாயம் அடைந்தனர்.

நைஜீரியா

இந்த கூட்டத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )