உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்…
கர்நாடகாவில் இருந்து நாடுகாணி வழியாக கேரளாவிற்கு காய்கறி ஏற்றி சென்ற லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்…
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்களை இரும்புபாலம் என்னும் இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து வந்த நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி லாரி மற்றும் வாகனங்களில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 11 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கூடலூர் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் மீண்டும் கூடலூர் நாடுகாணி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகளை ஏற்றி சென்ற லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை கண்டுபிடிக்கப்பட்டு அதனை பறிமுதல் செய்து கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமரிடம் ஒப்படைத்தனர்.
இன்று ஒரே நாளில் மட்டும் கூடலூர் சோதனை சாவடிகளில் உரிய ஆவணம் என்று எடுத்துச் செல்லப்பட்ட 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.