BREAKING NEWS

உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன இந்திய விமானப் படை வீரர் அதிரடி கைது!!

இந்தியாவில் இருந்து கொண்ட எதிரி நாடான பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து சதி செய்த இந்திய விமானப் படை வீரர் ஒருவரை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவரால் நம் நாட்டிற்கு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாமோ என்ற பீதி நிலவி வருகிறது.

தேவேந்திர சர்மா இந்திய விமானப் படையில் வீரராக பணியாற்றி வந்தார். இவர் இந்திய விமானப் படையில் இருந்து கொண்டே, தொடர்ந்து நம் நாட்டிற்கு ட்ரோன்கள் மூலமாகவும், பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தந்து கொண்டிருக்கும் அண்டை எதிரி நாடான பாகிஸ்தானுக்கு உளவு பார்த்துக் கொண்டிருந்தார். வீரர் தேவேந்திர சர்மா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இந்திய விமானப் படை குறித்த ரகசிய தகவல்களை பரிமாறியதாக அவர் மீது பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக டெல்லி காவல்துறை பகிரங்கமாக தெரிவித்துள்ளது. இவர்களின் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்யும் வகையில் விமானப்படை வீரர் தேவேந்திர சர்மாவின், மனைவியின் வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கிடமான வகையில் பணப்பரிவர்த்தனைகளும் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறை கூறியுள்ளது.

தேவேந்திர சர்மாவிடம் தொடர்ந்து டெல்லி காவல்துறை துருவித்துருவி விசாரித்து வருகிறார்கள். அவரிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் குறித்து மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )