BREAKING NEWS

எல்லாபுரம் ஒன்றியம் தாராட்சி கிராம ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாராட்சி கிராமத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செஞ்சுவேல் அதிகார துஷ்பிரியோகம் செய்யும் வகையில் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர்களை மிரட்டும் தோனியில் பேசியும் அநாகரிகமாகவும் பேசினார்.

பின்னர் மண்டல துணை வட்டார அலுவலர் பாலாஜி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டம் தொடங்கும் போதே கையெழுத்து பெற்றும் கூட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில் சொல்லாமலும் காவல்துறைக்கு தகவல் கொடுத்து அமைதியான முறையில் நடந்து வந்த கிராம சபை கூட்டத்தில் திட்டமிட்டு பிரச்சனை ஏற்பட காரணமான மண்டல துணை வட்டார அலுவலர் பாலாஜி மற்றும் தாராட்சி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செஞ்சுவேல் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் தாராட்சி கிராமத்தில் மீண்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாபெரும் கண்ட ஆர்பாட்டத்தை நடத்தினர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாராட்சி கிராம பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES