BREAKING NEWS

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய ஆல்பம் வெளியீடு!

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய ஆல்பம் வெளியீடு!

மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய ’விஸ்வரூப தரிசனம்’ என்ற இசை ஆல்பத்தை சிம்பொனி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆல்பத்தை பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் சென்னையில் நடந்த விழாவில் வெளியிட்டார். குருநாத சித்தரின் பாடல்களுக்கு கே.எஸ்.ரகுநாதன் இசை அமைத்துள்ளார். இயக்கி, தயாரித்துள்ளார் ஸ்ரீஹரி .

இந்த ஆல்பம் பற்றி அவர் கூறும்போது, ” இது 30 நிமிட இசை ஆல்பம். இதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான் பாட வேண்டும் என்று முடிவு செய்தோம். பாடலுக்கான பிண்ணனி இசை தயார் நிலையில் இல்லாதிருந்தபோதும் அவர் குரலில் இந்தப் பாடலை உடனே ஒலிப்பதிவு செய்து முடிக்க விரும்பினேன்.

பின்னணி இசை இல்லாமல் ‘டெம்போ கிளிக் டிராக்’ என்னும் நுணுக்கத்தைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்தோம். அன்று, பின்னணி இசை இல்லாமல் அவர் குரலில் பாடலைப் பதிவு செய்யாமல் இருந்திருந்தால், இன்று இந்தப் பாடலை இழந்திருப்போம். அவருடைய அற்புதமான, வசீகரமான, தெய்வீகமான, இனிமையான மாயக்குரலை இந்த அற்புத படைப்பு இழந்திருக்கும். எஸ்.பி.பியின் ரசிகர்களுக்கு இந்த ஆல்பத்தை அளிக்கிறோம்” என்றார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )