BREAKING NEWS

ஓசூரில் நடைபெற்று வரும் ரயில்வே பால பணிகள் குறித்து கிருஷ்ணகிரி தொகுதி எம்பி அதிருப்தி

ஓசூரில் நடைபெற்று வரும் ரயில்வே பால பணிகள் குறித்து கிருஷ்ணகிரி தொகுதி எம்பி அதிருப்தி. விரைந்து முடிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் ரயில்வே பாலப் பணிகள் கடந்த ஆண்டு துவங்கி நடைபெற்று வருகிறது. மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என்ற திட்டமிடுதலில் துவங்கப்பட்ட இந்த பணிகள் ஓராண்டாகியும் நிறைவடையாமல் உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் ரயில்வே துறையினருக்கு புகார்கள் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு கிருஷ்ணகிரி தொகுதி எம்பி கோபிநாத் பார்வையிட்டு பணிகள் பற்றி கேட்டு அறிந்தார்.

கடந்த ஆண்டு பொதுமக்கள் நலன் கருதி துவங்கப்பட்ட இந்த ரயில்வே பாலப் பணிகள் மூன்று மாத காலத்தில் முடித்து தரப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் இதுவரை தொடர்ந்து ஓராண்டாகியும் பணிகள் முடிவடையாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த பணிகள் குறித்து இதே இடத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த பொழுது என்ன நிலைமை இருந்ததோ அதைவிட மோசமான நிலைமையே தற்பொழுதும் நிலவி வருகிறது.

இது பற்றிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு முறையான பதில் யாரும் தரவில்லை. தற்சமயம் மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் அளவிற்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த பணிகள் மிகுந்த அதிருப்தியை அளித்துள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக இந்த ரயில்வே பாலப் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளுவதாக கிருஷ்ணகிரி M.P. கோபிநாத் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS