BREAKING NEWS

கடந்த 24 ஆண்டுகளாக மெட்டு குளத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் சரவணன்: இவர் பணியிட மாற்றம் செய்யப்படுவாரா?

கடந்த 24 ஆண்டுகளாக மெட்டு குளத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் சரவணன்: இவர் பணியிட மாற்றம் செய்யப்படுவாரா?

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் ஊராட்சியில் கடந்த 24 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக பணிபுரிபவர் சரவணன். இவர் மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி ஆவார்.

இவரை புல்லட் சரவணன் என்று அனைவரும் செல்லமாக அழைக்கின்றனர். இந்த ஊரில் உள்ளவர்கள் பாதி பேர் இவருக்கு உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் இவர் செய்து தருகிறார்.

வீட்டிற்கு வரி செலுத்துவதாக கருந்தாலும் சரி, தண்ணீர் வரி என்று எந்த வரி செலுத்துவதாக இருந்தாலும் இவர் பார்த்துக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கு இவர் சலுகைகள் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 24 ஆண்டுகளாக மெட்டுக்குளத்திலேயே ஊராட்சி செயலராக இவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இவர் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உள்ளார் என்றால் வரும் அதிகாரிகளை எல்லாம் பார்த்து சரி கட்டி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஒரு அதிகாரி கூட இவரை பணியிட மாற்றம் செய்யவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடிப்படை காரணம் என்னவென்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. தெள்ளத் தெளிவாகவே புரிகிறது.

அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் அரசு ஊழியர்கள் பணியாற்றக்கூடாது என்ற ஒரு விதி இருக்கிறது .அந்த விதியை மீறி 24 ஆண்டுகளாக இவர் தொடர்ந்து ஒரே ஊரில் பணியாற்றி வருவது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருக்கு வேண்டப்பட்டவர்கள் என்றால் அவர்களுக்கு ஒரு மாதிரி செய்வது, வேண்டப்படாதவர்கள் என்றால் அவர்களுக்கு ஒரு மாதிரி செய்வது என்று இவர் தனது தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

எது எப்படியோ போகட்டும் கடந்த 24 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிய இவரை அனுமதித்த அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்போதுதான இந்த நடவடிக்கைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்களும் நடுநிலையாளர்களும்.

இதற்குப் பிறகும் இவர் மெட்டுக்குளத்திலேயே பணியாற்றுவாரா? இல்லை பணியிட மாற்றம் செய்யப்படுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.

செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன் 

CATEGORIES
TAGS