கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் உருவம் பதிவாகியுள்ளது பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது மாநில கூடுதல் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன்

மயிலாடுதுறை மாவட்டத்தை நான்கு நாட்களாக அச்சுறுத்தி வரும் சிறுத்தை பிடிப்பதற்கு வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் சிறுத்தையின் புகைப்படம் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் ஆரோக்கியநாதபுரம் கருவை காட்டு பகுதியில் மாநில கூடுதல் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் ஆய்வு செய்தார் அப்போது செய்தியாளர்களிடம் பேசி அவர் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாடிய படம் வெளியாகி உள்ளது வனத்துறை சார்பில் சற்று நேரத்தில் பத்திரிக்கை குறிப்பு புகைப்படத்துடன் அனுப்பப்படும் சம்பவ இடத்தை பார்வையிட்ட மாநில கூடுதல் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் தகவல்.
CATEGORIES மயிலாடுதுறை