BREAKING NEWS

கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வேலூர்,

மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்கள் மாநில மாணவரணி செயலாளர் CVMP.எழிலரசன் MLA ஆகியோர் அறிவிப்பின்படி, ஒன்றிய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்து..,

 

வருகிற 15ஆம் தேதி வேலூர் மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

 

இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி ExMP, வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA,  தலைமை செயற்குழு உறுப்பினர் R.P.ஏழுமலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் K.ராஜமார்தாண்டன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் U.ரவிக்குமார்,

 

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் N.பிரகாஷ், A.பாலாஜி, தாமோதரன்  மற்றும் மாவட்ட இளைஞர் அணி மாணவரணி மற்றும் ஒன்றிய பகுதி நகர பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )