BREAKING NEWS

கரூர் நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணியில் 358 அலுவலர்களும் 804 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணியில் 358 அலுவலர்களும் 804 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணியில் 358 அலுவலர்களும் 804 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

கரூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த (19.04.2024) அன்று 1,070 வாக்குபதிவு மையங்களில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணும் பணி இன்று காலை குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் துவங்கப்படவுள்ளது. கரூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் 358 அரசு அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் 804 காவல் துறையினர் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் தொகுதிக்குட்பட்ட கரூர் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 20 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச்சாவடி, 14 மேஜைகளில் 19 சுற்றுகள், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி 253 வாக்குச்சாவடிகள். 14 மேஜைகளில் 19 சுற்றுகள். மணப்பாறை சட்டமன்ற தொகுதி 324 வாக்குச்சாவடிகள். 14 மேஜைகளில் 24 சுற்றுகள், விராலிமலை சட்டமன்ற தொகுதி 255 வாக்குச்சாவடிகள். 14 மேஜைகளில் 19 சுற்றுகள். வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 309 வாக்குச்சாவடிகள். 14 மேஜைகளில் 23 சுற்றுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் என மொத்தம் 7.708 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தபால் வாக்குகள் அனைத்தும் தேர்தல் பொதுப்பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைப்பேசி எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ள எந்த பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அலுவலர்கள் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

CATEGORIES
TAGS