கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது
கரூர் அருகே தலவாபாளையம் தனியார் கல்லூரியில் கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது கரூர் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி பார்வையிட்டார்,
அவர் பேட்டி அளக்கையில்
இந்தியா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும், குறிப்பாக வட மாநிலங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு இருக்கிறது பார்க்க முடிகிறது, பிரதமர் மோடி மாண்பை குறைக்கும் வகையில் குறிப்பிட்ட இஸ்லாமிய சமூக மக்களை குறிவைத்து தேர்தலை நடத்துவது அபாயகரமாக உள்ளது, பத்தாண்டு காலம் சாதனையில் சொல்லி வாக்கு கேட்க வேண்டும் பிரதமர் அதற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்,
நாடாளுமன்ற வேட்பாளர் பிரஜ்வல் ரேவன் நூற்றுக்கணக்கான பெண்களின் பாலியல் வன்கொடுமை அதிர்ச்சிகரமான சம்பவம் உள்ளது, அப்படிப்பட்ட வேட்பாளர் முன்னரே பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தலைமைக்கு எழுதியுள்ளார், அதனை மீறி பெண்களிடம் கொடூரமாக நடந்து கொள்கின்றனர் பாரதிய ஜனதா கட்சியில் சீட்டு கொடுத்தது மட்டும் இல்லாமல். பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபரை பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக உள்ளனர்
என்று கூறினார்.