BREAKING NEWS

கல்வி

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நிறுத்தி வைப்பு!

வேலூர்,ஏப்.14:  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைக் கடிதம் மூலம் சேர்க்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதியில் அடங்கிய மாணவ. மாணவியர் அதே தொகுதியில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உறுப்பினர்களின் கடிதம் பெற்று சேர்ந்து கொள்ளலாம். இதன்படி ஒரு பள்ளியில் 6 மாணவர்களுக்கு உறுப்பினர்கள் பரிந்துரை கடிதம் வழங்கலாம். கடந்த 2016-2017ம் ஆண்டில் இந்த முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு 10 மாணவர்களுக்கு பரிந்துரை கடிதம் வழங்கலாம் என்று கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஏப்ரல் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே, செகந்திராபாத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவின் தலைமை அலுவலகத்தில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு அவசரக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் மறு உத்தரவு வரும் வரை சிறப்பு ஒதுக்கீடுகளின் கீழ் எந்த மாணவர்களையும் பள்ளிகளில் சேர்க்க கூடாது என்று அதன் தலைவர் சசீந்திரன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )