கல்வி
தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை!! கல்வித் துறை அதிரடி!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது பிப்ரவரி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் தொடங்கியுள்ளன. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு குறித்த அச்சத்தை போக்கும் வகையில் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. பாடத்திட்டங்களும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் , பிளஸ் 2 மாணவர்களுக்கு மே5ம் தேதி 10ம் வகுப்புக்கு மே 6ம் தேதி, பிளஸ்1க்கு மே10ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை, அந்தந்த பள்ளிகளே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
சில தனியார் பள்ளிகளில், நடத்தை மற்றும் கல்வி கட்டண பாக்கி செலுத்தாத மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாது எனவும் , அவர்களுக்கு ஹால் டிக்கெட் தருவதை நிறுத்தியும் வைத்துள்ளதாக தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து, மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும், கல்வி அலுவலகங்களில் புகார் தெரிவித்து உள்ளனர்.இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் ‘‘அரசு தேர்வு துறையால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும், பொது தேர்வில் பங்கேற்க வகை செய்யவேண்டும். அவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளிகள் உடனடியாக வழங்கிட வேண்டும். இதனை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதேபோல மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.