காட்பாடி அருகே கைக்குழந்தையுடன் தன்னை விட்டுச் சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் காவல் நிலையத்தில் தர்ணா போலீசார் விசாரணை
காட்பாடி அருகே கைக்குழந்தையுடன் தன்னை விட்டுச் சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் காவல் நிலையத்தில் தர்ணா போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அடுத்த கீரைசாத்து காலனி பகுதியை சேர்ந்தவர் தீபிகா 22 இவருக்கு சீமோன் என்வபருடன் கடந்த 4 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில்
இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது இந்நிலையில் சீமோன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தீபிகாவை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பு அந்தப் பெண்ணுடன் சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
இது குறித்து தீபிகா கடந்த டிசம்பர் மாதம் பொன்னை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சீமோனை அழைத்து வந்து சமாதானம் செய்து வைத்து இருவரையும் சேர்த்து வைத்து அனுப்பி உள்ளனர்
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் சீமோன் தீபிகாவை விட்டுவிட்டு மறுபடியும் அந்த பெண்ணுடன் சென்று விட்டதாக கூறி பொன்னை காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளிக்க சென்றுள்ளார் அப்போது போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதனையடுத்து கைக்குழந்தையுடன் தீபிகா காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார் அங்கு தீபிகாவை பொன்னை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்குமாறு கூறி காட்பாடி அனைத்து மகளிர் காவல்ர்கள் அனுப்பியுள்ளனர்
இதனால் விரக்தி அடைந்த தீபிகா கைக்கு குழந்தையுடன் நேற்று மாலை 4 மணி அளவில் பொன்னை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க சென்றுள்ளார் அப்போது போலீசார் இதனை நாங்கள் ஏற்க முடியாது எனவும் மேலும் அனைத்து மகளிர் காவலர்கள் மூலம் இப்பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுமாறு கூறியதாக கூறப்படுகின்றது.
குறித்து தீபிகா கூறுகையில் கைக்குழந்தையுடன் நான் காலை முதல் மாலை வரை அலைகழிக்கப்பட்டு வருகிறேன் எனவும் இது குறித்து மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளார்.
தன்னை கணவருடன் சேர்த்து வைக்க கூறி கைக்குழந்தையுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தால் பொன்னை காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது