BREAKING NEWS

காட்பாடியில் கத்திரி வெயிலில் அவதிப்படும் பொதுமக்களை தாக்கத்தை குறைத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர்

காட்பாடியில் கத்திரி வெயிலில் அவதிப்படும் பொதுமக்களை தாக்கத்தை குறைத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர்

வேலூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் தாக்கம் 110 டிகிரியைத் தாண்டி தொடர்ந்து பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டிற்கு இணங்க பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

இதனையடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் பேருந்து நிலையத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் E.ரஞ்சித் குமார் தலைமையில் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கே.எஸ்.சுபாஷ் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கே.எஸ்.திருமால் சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் கே ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகர மாவட்ட எஸ்.ஆர்.கே அப்பு அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து நுங்கு, இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, ஆரஞ்சு பழம், பன்னீர், திராட்சை, திராட்சை கிரணி பழம், மோர், ரஸ்னா குளிர் பானம் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார் இதில் அதிமுக தொண்டர்கள் பெருதிரளாக கலந்துகொண்டனர்

மறைந்த அதிமுக முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Share this…

CATEGORIES
TAGS