கிராமசபை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் திருபுவனம் ஊராட்சியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
திருபுவனம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார் .
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பேசும் போது 18 வயதுக்கு குறைவான பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.மேலும் ஆண்.பெண் பிள்ளைகளை கல்லூரி வரை கட்டாயம் உயர்கல்விவரை படிக்க வைக்க வேண்டும், என அறிவுரை வழங்கி பேசினார்
CATEGORIES தஞ்சாவூர்