கிராமத்தின் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டபட்ட இடத்தில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியதாக புகார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மொட்டனூத்து ஊராட்சியில் உள்ளது காமாட்சிபுரம் கிராமம்
300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் கிராமத்தின் பயன்பாட்டிற்காக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கடந்த ஓராண்டிற்கு முன்பு இடிக்கப்பட்ட நிலையில்
அந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சீர் மரபினர் நல சங்கத்தினர் ஓராண்டிற்கும் மேலாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது
இதனால் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சீர் மரபினர் நல சங்கத்தை சேர்ந்த நபர்கள் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கையில் ஒரு மாலை மற்றும் அணிவிப்பதற்காக பொன்னாடை கொண்டு வந்தனர்
தங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஐயப்பன் அறைக்குள் சென்ற அவர்கள் இதுவரை அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எதிர்ப்பை தெரிவித்து வந்த தங்களிடம் மாலை மரியாதையை வாங்கிக் கொள்ள கேட்டனர்
அதனை வாங்க மறுத்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்
அமர்ந்து பேசும்படி வந்தவர்களிடம் தெரிவிக்கவே
ஓர் ஆண்டாக தேனி மாவட்டம் முழுவதிலும் அதிகாரிகளிடம் மனு கொடுக்க அலைந்து கொண்டே இருப்பதாகவும் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர்
இதுகுறித்து கிராம ஊராட்சி ஆணையாளர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் தெரிவித்ததையடுத்து கொண்டு வந்திருந்த மாலை மற்றும் பொன்னாடையை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வெளியில் உள்ள கேட்டிற்கு அணிவித்து விட்டு புறப்பட்டு சென்றனர்.