கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில் அவர்களின் மதிப்பெண்களுக்கு மதிப்பு வழங்கி அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கி பயிற்சி வழங்கி வருவதாக ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் நீட் பயிற்சி மைய தமிழக ஏரியா ஹெட் மலர்செல்வன் தெரிவித்தார்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகள் தமிழகத்தில் மேமாதம் 5ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1.3 லட்சம் மாணவர்கள் எழுதினர் இத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று ஜுன் 4ம் தேதி வெளியானது
இத்தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகின்ற ஆகாஷ் எஜுகேஷனல் சர்விசஸ் அகாடமியை சேர்ந்த மாணவர்கள் சுமார் 350க்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர்.
அதில் 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்தனர். குறிப்பாக தேசிய தேர்வு முகமை இத்தேர்வுக்கு மாணவர்களுக்கு மொத்தமாக 720 மதிப்பெண்கள் வழங்கியது. இதில் இம்மையத்தில் பயிற்சி பெற்ற விஜய் கிருத்திக் என்ற மாணவர் 715 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய தர வரிசையில் 112வது இடம் பிடித்து சாதனை படைத்தார் அதேபோல 700 க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இன்று பீளமேடு பகுதியில் உள்ள ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது.
இதனை தொடர்த்து இந்த வெற்றியை கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தொடர்த்து மாணவர்களுக்கு
ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் பயிற்சி மைய தமிழ்நாடு ஏரியா ஹெட் மலர்செல்வன், மற்றும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் அகாடமியின் உதவி இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி, ஆர் எஸ் புரம் கிளை மேலாளர் செந்தில்குமார், பீளமேடு கிளை மேலாளர் நவீன் குமார், பரிசு கோப்பைகளை வழங்கி பெருமை படுத்தினர்.
தொடர்த்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மலர் செல்வன் கூறும் பொழுது…
கடந்த ஆண்டு நமது பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒப்பிடும் பொழுது இந்த ஆண்டு 100க்கு 65 சதவீகிதத்திற்க்கும் மேல் மாணவர்கள் தேர்ச்சியடையந்துள்ளனர். இது மையத்தின் தரத்தை உணர்த்துகின்றது மாணவர்களுக்கு புரியும் வகையில் இங்கு பயிற்சி அளிக்க பட்டு வருகிறது என்றார்.
கிராம புற மாணவர்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு தடுக்கின்றதா என்ற கேள்விக்கு நீட் தேர்வு நாம் எதிர் கொள்ளும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டு உள்ளோம், இதற்காக கிராம புற மாணவர்களுக்கும் நீட் தேர்வை எதிர் கொள்ள நமது ஆகாஷ் அகாடமி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கி வருகின்றோம்.
மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு கட்டண தள்ளுபடி அளித்து வருகின்றதாகவும், நன்கு பயிலும் மாணவ, மாணவிகள் ஏழ்மை நிலையில் இருந்தால் அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக நீட் தேர்வு பயிற்சி அளித்து வருகின்றதாகவும் எனவே நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் எப்போது வேண்டு மென்றாலும் எங்களது பயிற்சி முகாமில் நீட் பயிற்சி வகுப்புகளில் படித்து நீட் தேர்வை எதிர் கொள்ளலாம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிச்சயம் ஆகாஷ் அகாடமி நிறைவேற்ற உறுதுணையாக இருக்கும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.