BREAKING NEWS

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.

முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பங்கேற்று நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்

முன்னதாக ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரை ஆய்வு செய்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் தரத்துடன் இருப்பதை ஆட்சியர் முன்னிலையில் உறுதிப்படுத்தினர்

மேலும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவிக்கும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கொடியசைத்து தொடங்கி வைத்தார்

இதனை தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையினர் மற்றும் மகளிர் சுய உதவி குழுவை சார்ந்த பெண்கள் இணைந்து நடத்திய மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு விழிப்புணர் பேரணியில் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்

இந்த விழிப்புணர்வு பேரணி முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தொடங்கப்பட்டு நவல்பூர் ராணிப்பேட்டை போன்ற முக்கிய சாலைகளின் வழியாக நடைபெற்று பின்னர் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது

நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத். ராணிப்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் சீமா, ரமேஷ்கர்ணா மற்றும் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் பற்குணன், உதவி நிர்வாக பொறியாளர் குமரவேல், பொறியாளர் ஜெயப்பிரியா.
நடராஜன் பங்கஜவல்லி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS