BREAKING NEWS

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் அருகே வீட்டுக்கு பட்டா மாற்றி மோசடி புதிய நீதிக் கட்சி நிர்வாகி புகார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் அருகே வீட்டுக்கு பட்டா மாற்றி மோசடி புதிய நீதிக் கட்சி நிர்வாகி புகார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம்  கே.ஜி.எப்.பைச் சேர்ந்த காய்கனி வியாபாரிக்குச் சொந்தமாக, குடியாத்தம் அருகே வளத்தூர் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு போலியாக பட்டாவை வருவாய்த் துறையினர் தயாரித்து அளித்து மோசடி செய்யப்பட்டுள்ளது என குடியாத்தம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் புதிய நீதிக் கட்சியின் அம்பேத்கர் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும் வேலூர் மண்டல தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளரும் பாரத் தி.பிரவீன்குமார் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நெடுமாறனிடம் பிரவீன்குமார் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது கே.ஜி.எப்பை சேர்ந்த காய்கனி வியாபாரி உதயகுமார், இவரது பூர்வீக கிராமம் குடியாத்தம் அருகேயுள்ள வளத்தூர் கிராமம். இவரது தாய் வழியில் வந்த வீட்டுமனை கிராம சர்வே எண் 164-இல் உள்ளது.
இவர் வெளியூரில் வசித்து வந்தாலும், சொந்த ஊருக்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மணி என்பவர், இந்த வீட்டில் சில நாள்கள் தங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறி உதயகுமாரிடம் சாவி கேட்டு வாங்கியுள்ளார். அப்படி சாவி வாங்கியவர், நிரந்தரமாக தங்கிவிட்டார்.
வாடகையும் கொடுக்காமல் மணியோ உதயகுமாரின் வீட்டில் தங்கிவிட, இவரும் வீட்டுக்கு காவலாய் இரு என்று கூறி விட்டு விட்டார்.

இந்த நிலையில், உதயகுமாரின் பெயரில் மின் இணைப்பு, ஊராட்சி வரிகள் எல்லாம் இருந்தது.இப்படிப்பட்ட சூழ்நிலையில், மணி மோசடியான ஆவணங்களைத் தயார் செய்து, தனது பெயருக்கு வருவாய்த் துறையினர், ஊராட்சி நிர்வாகத்தினரின் துணையோடு பட்டா மாற்றத்தை பெற்றுள்ளார்.

இதை சமீபத்தில் அறிந்த உதயகுமார் குடியாத்தம் ஆர்.டி.ஓ.வுக்கு மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். மேலும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அனுப்பியுள்ளார்.இதுகுறித்து புதிய நீதிக் கட்சியின் வேலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாரத் தி.பிரவீன்குமாரும் இந்த மோசடி குறித்து அரசுத் துறைகளுக்கு பல்வேறு மனுக்களை அனுப்பிவருகிறார்.

இதுபோன்று வளத்தூர் ஊராட்சியில் பல்வேறு இடங்களில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

CATEGORIES
TAGS